வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இளம்பெண் அதே அப்பகுதியில் வசிக்கும் ராஜ்கிரன் என்பவரிடம் பேசி பழகி உள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் நம்பி சென்றுள்ளார். அங்கு அவருக்கு கூல் ட்ரிங்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதையும் வாங்கி அந்த இளம்பெண் குடித்துள்ளார். ஆனால் அவருக்கு தெரியாது அந்த கூல்டிரிங்ஸில் மயக்க மறந்து கலந்துள்ளது என்று, பின்னர் அதை குடித்துவிட்டு அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ராஜ்கிரண் அவரது நண்பர்கள் 3 பேரை வரவழைத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.