Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நாங்க பொண்ணு பாக்கட்டுமா…..? தமிழக பொண்ணு ஓகேனா சொல்லுங்க….. வெட்கத்தில் முகம் சிவந்த ராகுல்…..!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரியில் வைத்து ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இவர் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தின் போது நேற்று ராகுல் காந்தி வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியை கண்டவுடன் பெண்கள் மகிழ்ச்சியுடன் அவரை சூழ்ந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசினர். அப்போது சில பெண்கள் நீங்கள் தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று சொல்வதால் உங்களுக்கு நாங்கள் தமிழக பெண்ணை பார்த்து மணமுடித்து வைக்கட்டுமா என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் ராகுல் காந்திக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. இந்த வேடிக்கையான நிகழ்வை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் 52 வயதாகும் ராகுல் காந்தி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |