Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு நாங்க இருக்கோம்”…. உதவிக்கரம் நீட்டிய ஸ்விட்சர்லாந்து…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யா தாக்குதல் காரணமாக உருக்குலைந்த உக்ரைனின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அடிப்படையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டிரக்குகள் உக்ரைன் எல்லையை வந்தடைந்தது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடு திரும்பி வருகின்றனர். தற்போது உக்ரைனில் உள்ள பொதுமக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போர் காரணமாக ரஷ்யா- உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள், நிதி உதவி உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது ஸ்விட்சர்லாந்தின் சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தின் வாயிலாக ஹங்கேரியில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய 30 டிரக்குகள் புறப்பட்டு ருமேனியாவின் siret பகுதியில் உள்ள உக்ரைன் எல்லைக்கு வந்தடைந்துள்ளது.

Categories

Tech |