Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் கிடைக்கலையா?….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் தகுதி உடையவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனைப் போல அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைப்பதற்காக அரசு தற்போது பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை முறையாக சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் மக்கள் தங்களுக்கான பலன்களை அடைய முடிகின்றது.இந்நிலையில் தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது திருமண உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் அனைத்தையும் உடனடியாக 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திலும் உள்ள கோரிக்கை மனுக்களை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |