டிஜிட்டல் கடன் செயலிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நீங்கள் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு நிதிமோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள்.
# சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியதும், உங்களது தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா ஆகியவற்றிற்கான அணுகலை அவை கோருகிறது. ஆகவே உங்களது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
# ஏதேனும் கடன் பயன்பாட்டின் நம்பகத்தன்மை பற்றி உங்களுக்கு சந்தேகம் இருப்பின், கடனைப் பெற எப்போதும் தெரிந்த வங்கி (அல்லது) நிதி நிறுவனத்திற்குச் செல்லவேண்டும். வங்கி அல்லாத நிதிநிறுவனங்களின் (NBFCs) பட்டியலை RBI பராமரிக்கிறது. அவற்றில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக கடனைப் பெறலாம்.
# லாபகரமான சலுகைகளுடன் உடனடி கடன்களை உறுதி அளிக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளுடன் இணைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
# இதுபோன்ற இணைப்புகள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் மற்றும் உங்கள் கணினியை வைரஸ்கள் (அல்லது) ஸ்பைவேர் வாயிலாக பாதிக்கலாம். அதனையொட்டி தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம். உங்களை அச்சுறுத்துவதற்கு (அல்லது) மிரட்டுவதற்கு மோசடி செய்பவர்களால் தரவு பயன்படுத்தப்படலாம்.
# கூகுள் பிளேஸ்டோர் (அல்லது) ஆப்ஸ்டோர் (ஐபோன்களுக்கு) ஆகிய நம்பகமான ஆதாரங்களிலிருந்து எந்த டிஜிட்டல் பயன்பாட்டையும் பதிவிறக்க வேண்டாம். எந்த ஒரு நிதிபயன்பாட்டையும் பதிவிறக்கும் முன்பு, எப்போதும் விபரங்களைச் சரிபார்த்து, பயனர்கள் பகிர்ந்துள்ள மதிப்புரைகளைப் பார்க்க வேண்டும்.