நீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் உங்களுக்குள் இருப்பது, மற்றும் உங்களுடைய முன் பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் காரணமாக நமக்கு இந்த பிறவியில் தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பிக்கும் காரணங்கள்.?
இந்த ஜென்மத்தில் நாம் சரியான விதத்தில் வழிபாட்டு முறைகளை அல்லது சரியான உணவுகளையோ எடுக்காமல் சரியான விதத்தில் இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பித்துவிடும்.
சில பேர் கோவில்களுக்கு செல்லவே மாட்டார்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு உடலில் தெய்வ சக்தி இருக்கும். இப்பொழுது நான் சொல்லக்கூடிய அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
கோவிலில் பூஜை நடக்கக்கூடிய நேரம் அல்லது வீட்டில் பூஜை செய்யக் கூடிய நேரம் கற்பூர ஆரத்தி காட்டும்போது ஒரு சில வினாடிகள் நீங்கள் தன் நிலையை மறந்து விடுவீர்கள். அந்த ஒரு சில வினாடிகள் என்ன நடப்பது என்பதையே மறந்து அந்த விக்ரகத்தை அல்லது கற்பூர ஆரத்தி காட்டும் அந்த நேரத்தில், ஏதாவது ஒரு விதத்தில் உங்களுடைய மனம் ஒருநிலைப்படும்.
இதன் தன்மை உங்களுக்கு இருந்தால் உங்கள் உடலில் 100% தெய்வசக்தி இருக்கும். அதன்பிறகு தெய்வ வழிபாடு நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மிகச் சிறந்த பலன்கள் உங்களுக்கு விரைவாக கிடைக்கும். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வந்தாலோ அல்லது கோவிலுக்கு போகவேண்டும் என்று நினைத்தாலோ உங்களுக்கு நிறைய பலவிதமான கனவுகள் வரும்.
அதாவது கோவில் சம்பந்தமான கனவுகள் இருக்காது, உங்களுடைய எண்ண அலைகள், சம்பந்தமில்லாத கனவுகள், மற்ற நாட்களில் இவ்வாறு கனவுகள் வந்திருக்காது. ஆனால் இந்த நேரத்தில் உங்களுக்கு அதிகப்படியான கனவுகள் உங்களை தொந்தரவு செய்யும். இவ்வாறு இருந்தாலும் உங்களுக்கு தெய்வ சக்தி இருக்கும். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலன் இன்றும் உங்களை தொடர்கிறது.
சாமி கும்பிடும் பொழுது அல்லது கற்பூர ஆரத்தி காட்டும்போது ஒரு சில கோவில்களில் மட்டும் உங்களுக்கு கொட்டாவி, கண்ணீர் வரும். இப்படி இருந்தாலும் தெய்வ சக்தி உங்கள் உடலில் இப்பொழுதும் தொடர்கிறது என்பதற்கான அறிகுறிதான். சில பேருக்கு தெய்வ வழிபாடுகளில் பெரிதாக ஈடுபாடு இருக்காது, ஆனால் அவர்களுக்கு நடக்கப்போவதை முன்னாடியே அறியக்கூடிய தன்மை இருக்கும்.
அதாவது கனவுகளின் மூலம் அறியலாம்,அல்லது ஏதாவது ஒன்று நடக்கும் பொழுது அவர்களின் மனதில் தோன்றும், இதுபோன்று தன்மைகள் இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வத்தின் சக்தியும் இருக்கும். சில பேருக்கு இயற்கையாகவே உடலில் அதிகப்படியான தெய்வத்தன்மை இருக்கும். அவர்களின் கைகளால் ஏதாவது ஒரு விதையை நட்டு கொண்டாலும் அந்த விதை பட்டுப் போகாமல் மிக விரைவாக வளரும்.
அனைவரின் கைகளிலும் செடி நட்டு வைத்தால் வளராமல் பட்டுபோகும், ஆனால் ஒரு சிலர் கைகளினால் வைக்கும்பொழுது மரம், செடி என அனைத்தும் நன்றாக வளரும். இப்படிப்பட்டவர்களை கைராசிகாரர்கள் என்றும் சொல்வார்கள். ஆனால் அது கைராசி கிடையாது அவர்களுக்குள் இருக்கக்கூடிய தெய்வ சக்தியும், அவர்களின் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான காந்த அலைகளும் தான் காரணம்.
நீங்கள் ஏதாவது ஒரு கோவிலுக்கோ அல்லது ஏதோ பூஜை நேரத்தில் கொட்டாவி கண்ணீர் வந்தாலோ, நீங்கள் அந்த கோவிலில் ஏதாவது ஒரு பகுதியில் தியானத்தில் அமர வேண்டும். அப்படி தியானத்தில் அமரும்போது உங்கள் உடலில் ஒருவிதமான அதிர்வலைகள்தோன்றும். அப்படி தோன்றினால் உங்களுக்குள் தெய்வசக்தி அதிகமாகவே இருக்கிறது என்று உணரலாம்.
நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது உங்களுடைய கண்களை மூடிக் கொண்டு இருப்பீர்கள் அந்த நேரத்தில் முழுமையாக வெள்ளையாக மாறக்கூடிய உணர்வு ஏற்பட்டால், அல்லது ஏதாவது வெடித்து மஞ்சள் நிறத்தில் தெரியும் படி உங்கள் மூளையில் பதியும் இப்படி இருந்தாலும் தெய்வ சக்தி இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
இந்த தன்மைகள் உங்களுக்குள் காட்டினால், சில பேர் ஆரம்பத்தில் பயந்து விடுவார்கள். தொடர்ந்து நீங்கள் தியானத்தில் அமரும்போது பலவிதமான சக்திகளை பெறும் அளவிற்கு தன்மை இருக்கும்.