Categories
உலக செய்திகள்

உங்களுக்குகொரோனா வரவேண்டும்…. வேண்டுமென்றே அலுவலக ஊழியர் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஸ்பெயினில் ஒருவர் வேண்டுமென்றே 22 பேருக்கு கொரோனாநோயை பரப்பிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 வயதுடைய நபர் ஒருவர் 22 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார். அவர் கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் பரிசோதனைகளை எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஜிம்முக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அனைவரும் அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறிய நிலையிலும் நான் அனைவருக்கும் கொரோனா நோயை பரப்ப போகிறேன் என்று கூறி தும்மியுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அலுவலகத்தில் 3  மூன்று பேரும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வேண்டும் என்றே கொரோனா பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |