Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?….!!!!

உங்களிடமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யவும், பணம் ஈட்டவும் பல வழிகள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது நேரடியாக தங்க நகை அல்லது நாணயம் போன்ற வடிவில் நிஜ தங்கமாக வாங்கி முதலீடு செய்யலாம். இருந்தாலும் நகை போன்ற நிஜ தங்கத்தை சேமித்து வைப்பதில் பல சிக்கல் உள்ளது. வங்கி லாக்கர்களில் நகையை சேமிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதனால் உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். இதற்காக ரிசர்வ் வங்கி தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தங்கத்தை டெபாசிட் செய்து வட்டி மூலம் வருமானம் பெற முடியும். உங்களிடம் பயன்படாமல் இருக்கும் நகை மற்றும் இதர சங்க சொத்துக்களை டெப்பாசிட் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.

இந்தத் திட்டத்தில் தங்க நகை, தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் போன்றவற்றை டெபாசிட் செய்யலாம். இதில் குறைந்தபட்சம் 10 கிராம் தங்கம் ஆவது டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. 1 முதல் 15 ஆண்டுகள் வரை முதலீட்டாளர் தமக்கு விருப்பமான காலகட்டத்தை தேர்வு செய்து தங்கத்தை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.

Categories

Tech |