பான் கார்டு என்பது தனிமனிதனின் முக்கிய அடையாளமாக உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வருமான வரி தாக்கலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பான் கார்டில் நீங்கள் செய்யும் சிறிய தவறுகளால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். உங்களது பான் கார்டு எண் எப்போதாவது பதிவிடும் போது சரியாக பத்து இலக்க எண்களை மிகவும் கவனமாக பதிவிட வேண்டும். அதில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் உங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க நேரிடும்.
அது மட்டுமல்லாமல் சில தவறுக்கு உங்களுக்கு பெரிய தண்டனை கிடைக்கலாம். அதாவது நீங்கள் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். உங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் இரண்டு பான் கார்டை பயன்படுத்தி வந்தால் அதில் ஒன்றை வருமானவரித்துறை இடம் ஒப்படைக்க வேண்டும். எனவே நீங்கள் இரண்டுக்கு பான் கார்டு வைத்திருந்தால் உடனே அதை சரண்டர் செய்து விடுங்கள். இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.