Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலைய முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.எனவே இதில் தனிப்பட்ட நபரின் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.குறிப்பாக தொலைபேசி எண் என்பது எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஆதாரில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்களுக்கு வரும் ஓடிபி எண்களை வைத்து தான் எந்த ஒரு மாற்றத்தையும் நாம் செய்ய முடியும்.ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை நாம் மாற்றும்போது அவற்றை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு முதலில் https://ask.uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று அதில் மொபைல் எண் மற்றும் கேப்சாவை பதிவிட வேண்டும். பின்னர் வரும் ஓடிபி உள்ளிட்டு ஆதார் அப்டேட் பகுதிக்கு சென்று உங்களின் மாற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்களின் பட்டியலில் what do you want to update என்ற கட்டத்தில் மொபைல் நம்பர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து மொபைல் எண் மற்றும் கேப்சாவை பதிவு செய்து ஓடிபி உள்ளிட்டு save and proceed என்று கொடுத்து உங்களுக்கான ஆதார் மையத்தின் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று இந்த செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |