Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ரஷ்யா போரை விரும்பவில்லை”…. கருத்து தெரிவித்த அதிபர் புதின் …!!

உக்ரைன் ,ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனையால்   அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்று  உக்ரைன். தற்போது உக்ரைனும் அதன்  அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே சண்டையிட்டு  வருகின்றனர். இந்த சண்டை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில்  ரஷ்யா 1,00000 க்கும்  அதிகமான போர் வீரர்களை குவித்துள்ளதால்  அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஏவுகணை நிலைநிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத் தன்மை குறித்து ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதன் நோட்டா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது எனவும் , மேலும் ரஷ்யா நிச்சயமாகக் போரை  விரும்பவில்லை எனவும்அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்  தெரிவித்துள்ளார்

Categories

Tech |