Categories
உலக செய்திகள்

“உக்ரைன் விவகாரம்”…. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா…. லீக்கான தகவல்….!!!!!

உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி ஐ.நா.வில் காணொலி மூலம் உரையாற்றுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக இந்தியா கடந்த புதன்கிழமை வாக்களித்தது. பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஐ.நா.வில் வாக்களிப்பது இதுவே முதன் முறையாகும். இதுவரையிலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இது போன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா நடுநிலை வகித்துவந்த சூழ்நிலையில், தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போா் காரணமாக ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ஆனால் இந்தியா இருநாடுகளும் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு அழைப்பு விடுத்தது. மேலும் பேச்சுவாா்த்தைக்கு உதவி செய்யவும் முன்வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக 2 வருடங்கள் பதவி வகிக்கிறது. இப்பதவிக் காலம் வருகிற டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் புதன்கிழமை துவங்கியது. இவற்றில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி காணொலி மூலம் பேசவிருந்தாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதா் வஸிலி ஏ.நெபேன்ஸியா, நடைமுறைப்படி ஸெலென்ஸ்கி உரையாற்றுவதற்கு முன்பு அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினாா்.

இது தொடர்பாக அவா் கூறியதாவது “பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ஸெலென்ஸ்கி பங்கேற்பதற்கு ரஷ்யா எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் அவா் நேரில் கலந்துகொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடந்தது. ஆனால் அது திட்டமிடப்படாத ஒன்றாகும். இப்போது வழக்கமான முறையில் கூட்டம் நடைபெறுவதால் அவரை உரையாற்ற அனுமதிப்பது பற்றி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கூறினார். அதனை தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 13 நாடுகள் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தது. ரஷ்யா மட்டும் எதிராக வாக்களித்தது. சீனா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.

Categories

Tech |