Categories
அரசியல்

உக்ரைன் விவகாரம்: ஜெய்சங்கருக்கு நேரடியாக போன் போட்ட முதல்வர்..!! மிரண்டுபோன அதிகாரிகள்….!!

உக்ரைனில் தொடர்ந்து 5-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு மீட்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு உணவு, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளை உறுதி செய்ய வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு அவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |