உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6 வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளை அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில் போர் முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கொமெல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா பல மணி நேரம் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது சண்டையை உடனடியாக நிறுத்தி விட்டு வெளியேறும்படி ரஷ்யா உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் உக்ரைன் ரஷ்யா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை போலாந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.