உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தி விடவில்லை.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாக, வர்த்தகம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்பு மீது ரஷ்யா படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரில் விண்வெளி ராக்கெட்களை உற்பத்தி செய்யும் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.