Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்…”ரஷ்யாவின் ஆயுதங்கள் தீர்ந்து விட்டது”…? இங்கிலாந்து உலக அமைப்பு தலைவர் தகவல்…!!!!!

உக்ரைன் மிது ரஷ்யாவின் போரானது தொடர்ந்து எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷ்ய ஆக்கிரமித்து இருக்கிறது. இருப்பினும் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிரீமியாக ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு  உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்களை  தீவிர படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில் ரஷ்யாவிற்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவின் ஆயுதங்கள் கணிசமாக குறைந்து விட்டதாக சில மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன எனவும் களத்தில் உள்ள ரஷ்ய தளபதிகளுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் என இங்கிலாந்தின் உளவு அமைப்பான ஐசி எச்க்யூ கியூ வின் தலைவர் ஜெரேமி பிளம்பிங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |