Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மகாத்மா காந்தியின் பொன்னான வார்த்தைகளை…. மேற்கோள் காட்டிய உக்ரைன் அதிபர்….!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது  மகாத்மா காந்தி வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.

அதாவது “பலம் என்பது பயம் இல்லாத நிலையில் உள்ளது, நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கையில் அல்ல.  முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” இவ்வாறு காந்தியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். முன்னதாக உக்ரைனுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் குமார் ஜெயினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Categories

Tech |