Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகர்  oleksiy arestovych உக்ரைனின் தாக்குதல் குறித்து பேசிய போது, உக்ரைனின் மரியுபோல் நகரம் கடந்த மார்ச்  மாதம் முதல் ரஷ்யப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது தெற்கு உக்ரைனின் மிக முக்கிய பாதுகாப்பு பகுதியாகும். இது ரஷ்யப்படைகளை கிழக்கு கெர்சன் பகுதியுடன் அனைத்து தந்திரோபாய வழியிலும் இணைக்கிறது. மரியுபோல் நகருக்கு அருகே உள்ள ரஷ்ய எல்லைக்கு செல்லும் அனைத்து வழிகளும் அதன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை மரியுபோல் நகரம் முற்றிலும் வீழ்த்தப்பட்டால் கெர்சன் வரையான அனைத்து பாதுகாப்பு வரிசைகளும் வீழ்த்தப்படும். மேலும் உக்ரைன்  படைகள் கிரிமியாவிற்கு செல்லும் நேரடி வழி கிடைத்து விடும் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |