Categories
உலக செய்திகள்

உக்ரைன், ரஷ்யா போர்…. உலகில் 5 ல் ஒருவருக்கு இந்த நிலை வரும்… ஐ.நா எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.நா விடுத்திருக்கிறது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு  தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் கூறும் போது, உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளையும் தாண்டியும் இந்தப் போர் வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் உலகின் 5-ல் ஒருவர், அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு  தள்ளப்படுவார்கள். இது அண்மையில் ஏற்படாத ஒரு சூழல். உக்ரைன் மற்றும் ரஷ்யாவும் உலகில் கோதுமை உற்பத்தியில் 30% பங்கு கொண்டிருக்கிறது.

அதேபோல் பார்லியும் உக்ரைன் மற்றும்  ரஷ்யாவில் தான் அதிக அளவில்  உற்பத்தியாகிறது. மக்காச்சோள உற்பத்தியில் உக்ரைன் உலகளவில் 5-வது இடத்தில் இருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கும் மேல் உக்ரைனில் தான் உருவாகிறது.வளர்ச்சி குன்றிய நாடுகளில் 45 நாடுகள் ரஷ்யா, உக்ரைன் கோதுமையையே நம்பியிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |