உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடு நிலையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் தலைநகர்அஷ்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பேட்டியளித்துள்ளார். அதில்உக்ரைன், ரஷ்யா போரால் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.