உக்ரைனின் போர் பதட்டத்திற்கு இடையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியா அதிபர் வேட்பாளரான யூன் சுக்-யோல் உக்ரைன் பதற்றத்திற்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது இணையதளத்தில் பதிவிட்டது யாதனில். “உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால் வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ளூர் கோவப்படுத்துதல் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் உள்ள தென்கொரிய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும், எண்ணெய் விலை உயர்வு போன்ற பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்குதல்களை சமாளிப்பதற்கும், அவசர நடவடிக்கைகளுக்கும் தென்கொரிய அதிபரும் வேட்பாளருமான யூன் சுக்-யோல் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் நெருக்கடிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆகாது. உக்ரேனில் உள்ள எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.