உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் நிபுணர்களை ரஷ்யா கிரிமியாவில் நிறுத்தி இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை தாக்குதலை நடத்தியுள்ளது இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இது ஈரானில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசும்போது கிvமியாவில் ஈரானிய ராணுவ வீரர்கள் களம் இறங்கி ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவிற்கு உதவியதாக நாங்கள் மதிப்பிடுகின்றோம்.
ஒப்பீட்டளவில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஈரானியர்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றார்கள் எனவும் ரஷ்ய வீரர்கள் ட்ரோன்களை இயக்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை பாதிக்கும் ஆயுதங்களை வழங்குவதன் மூலமாக ஈரான் நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறது. உக்ரைன் மக்களுக்கு எதிராக ஈரான் ஆயுதங்களை வழங்குவதை அம்பலபடுத்தவும் தடுக்கவும் அமெரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யாவிற்கு உதவியதற்காக மூன்று ஈரானிய ஜெனரர்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான ஷாஹித் ஏவியேசன் இண்டஸ்ட்ரீஸ் மீது இங்கிலாந்து தடைகளை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ரஷ்யா, உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ட்ரோன்கள் இரண்டாம் உலகப் போரில் தற்கொலை படையாக செயல்பட்ட ஜப்பானிய போர் விமானிகள் நினைவாக காமிகேஷ் ஸ்டோன்கள் என அழைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பை தாக்க ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மின் நிலையங்கள் கிட்டதட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அளித்திருக்கிறது இதனை அடுத்து உக்ரேனில் மின்சாரம் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.