உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்ய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் மோசமானவை. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. புச்சா நகர் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மிகக் கொடியது. உக்ரைனுக்கு எங்களால் இயன்ற உதவியை நாங்கள் கண்டிப்பாக செய்வோம் என அவர் கூறியுள்ளார்.