உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் துவங்கி இருப்பதால் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கமளித்துள்ளது.
இந்தியா்கள் உக்ரைனுக்கும், பிற பகுதிகளுக்கும் அவசியம் இல்லாமல் பயணம் மேற்கொள்வதைத் தவிா்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது. ரஷ்யா-கிரீமியா இணைப்பு பாலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, உக்ரைன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், இப்போது இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டிலுள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியம் அற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.