சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாற்பத்தி எட்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்த கலந்துரையாடலின் போது “உக்ரைன், ரஷ்யா போரை எப்படி மத்தியஸ்தம் செய்யலாம். எப்படி போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். சீனாவுடன் சேர்ந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இணைந்து நாம் அனைவருக்கும் எப்படி இந்த இரு நாடுகளுக்கு இடையே மோதலை தடுக்க முயற்சி செய்யலாம் என்பதே விவாதிக்க ஆசைப்படுகிறேன்.
இது இப்படியே தொடர்ந்தால் அது உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என இம்ரான்கான் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகளை பற்றி சீனாவும், பாகிஸ்தானும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இம்ரான் கான் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை சீனாவின் ஆதரவோடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.