Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டு மக்களுக்கு…. சுதந்திர தின வாழ்த்து செய்தி…. அனுப்பிய பிரபல நாட்டு மகாராணி….!!

உக்ரைன் மக்களுக்கு பிரித்தானிய மகாராணியார் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாடு நேற்று (24.8.2022), தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. போருக்கு மத்தியிலும் தங்கள் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் உக்ரைன் மக்களுக்கு பிரித்தானிய மகாராணியார் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  24.8.2022, உக்ரைனுடைய சுதந்திர தினம் மட்டுமல்ல,  ரஷ்யா அநியாயமாக அந்நாட்டின்மீது போர் தொடுத்ததன் ஆறாவது மாத நினைவுநாளும்கூட!இந்நிலையில், உக்ரைனுக்கு அனுப்பியுள்ள சுதந்திர தின வாழ்த்துக்களுடன், உக்ரைன் மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார் மகாராணியார். அவர் அனுப்பியுள்ள செய்தியில் கூறியதாவது,

“மதிப்பிற்குரிய உக்ரைன் ஜனாதிபதி அவர்களுக்கும், உக்ரைன் மக்களுக்கும், உங்களுடைய சுதந்திர தின நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் சவால் நிறைந்த இந்த ஆண்டில், உக்ரைனிலும் உலகமெங்கிலும் உள்ள உக்ரைன் மக்களுக்கு இன்றைய நாள் தங்கள் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அடையாளத்தையும் கொண்டாடும் நாள் என நான் நம்புகிறேன். மேலும் எதிர்காலத்திலாவது சிறந்த நாட்கள் அமையும் என நம்புவோம்” என்று பிரித்தானிய மகாராணியார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |