Categories
உலக செய்திகள்

ரொம்ப தைரியம் தான்….!! உக்ரைன் சாலைகளில் கண்ணிவெடிகள்…!! அனாயசமாக கடந்து சென்ற வாகன ஓட்டிகள்….!!

உக்ரைன் சாலைகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரமான கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் ரஷ்ய வீரர்கள் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்துள்ளனர்.

உக்ரைன் ராணுவ வீரர்கள் அந்த வழியாக வாகனத்தில் வரும்போது அவர்களை அழிக்கும் பொருட்டு ரஷ்ய வீரர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இதனை கண்ட உக்ரைன் வாகன ஓட்டிகள் அந்த கண்ணிவெடிகளின் மீது கார் டயர் படாதவாறு வளைந்து நெளிந்து வாகனங்களை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |