ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள உக்ரைனை பரிந்துரைக்க தயக்கம் காட்டும் ஒன்றாக நாடுகளில் டென்மார்க் உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது பற்றி டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை இருக்கின்றது. இந்த நிலையில் உக்ரைனின் வேட்பாளர் நிலையை அதிகரிக்க வேண்டுமென டென்மார்க்கை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் வேட்பாளர் நிலையை மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து வலுவாகவும் ஐக்கியமாகவும் டென்மார்க் இருக்க வேண்டுமென நான் மிகவும் விருப்பப்படுகிறேன். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் உரிமைகான பாதை இன்னும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். உக்ரைனியர்களை ஒன்றிணைப்பதற்காக முக்கிய காரணிகளில் ஒன்றாக இது அமைகிறது. டென்மார்க்கின் ராணுவ உதவி மிகவும் அவசியமானது. எங்களது நாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வரைவு தோற்றம் என கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் நாடாக உக்ரைனுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்குவதற்கு விரைவில் ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைக்கும் என தெரிகின்றது.