உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். அவர்களில் சிலர் ஸ்லோவேனியா எல்லை வழியாக இத்தாலிக்கு நுழைந்தனர்.
இந்நிலையில் இன்று 50 உக்ரைன் மக்களை அகதிகளாக இத்தாலிக்கு ஏற்றி சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அகதிகள் அனைவரையும் காவல்துறையின் முகாமுக்கு அழைத்துச் சென்று ஓய்வு பெற செய்து பின்னர் பயணத்தை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.