உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்திருக்கிறது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறிய போது, உக்ரைன் மீது ரஷ்யா போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க உக்ரைனுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் ஒப்புதலுக்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம். உக்ரைன் மீதான வாதத்தை சீர்திருத்தங்கள் என்பதிலிருந்து நெருக்கடி மேலாண்மை என மாற்றி அமைத்து உள்ளோம் என கூறியுள்ளார்.