டைட்டானிக் படத்தின் கதாநாயகன் உக்ரைனுக்கு 77 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 14வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதுவரை ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.
ரஷ்யாவின் படை எடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்கி வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற நடிகரரான லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ஆதரவாக 10 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோவின் தாய்வழி பாட்டியான ஹெலனே இன்டென்பிர்கென் தெற்கு உக்ரைனின் ஒடெசாவில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.