Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்காக போரிட்டரா…. ஹீரோவாக போற்றப்படும்…. பிரிட்டன் எம்.பி-யின் மகன்….!!

பிரிட்டன் எம்.பி.யின் மகன் உக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டிஷ் ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்படுகிறார். 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது கிரிமினல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷிய நீதித்துறை தெரிவித்துள்ளது. இங்கு கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷிய விசாரணையாளர்கள் தீர்மானிக்கின்றனர்.  ரஷ்யாவிலும் பல நாடுகளைப் போலவே  கூலிப்படை ஒரு கிரிமினல் குற்றமாகும்.

இதில் கிராண்டிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். குறிப்பாக  பிரிட்டனின் கடற்படையான ராயல் மரைன்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் பென் கிரான்ட். கடந்த மார்ச் மாதம் முதல், அவர் உக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டிஷ் ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்படுகிறார். அவரது போர் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் பத்திரிகையில் அடிக்கடி செய்தி வெளியிடுகின்றன. இதனை தொடர்ந்து சமீபத்தில் தீயில் காயம்பட்ட ஒரு வீரரின் உயிரைக் காப்பாற்றி அவரை போர்க்களத்தில் இருந்து தூக்கிச் சென்றுள்ளனர் என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |