Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க…. சென்னையில் புதிய கட்டுப்பாட்டு அறை….!!!

உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனில் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இதுவரை 130க்கும் மேற்பட்டோர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். ரஷியாவின் இந்தப் போரானது இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். எங்கும்  போர் மயமாக இருப்பதால் மக்கள் பீதியடைந்து பதுங்கு குழியிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் ரஷ்யாவின் தாக்குதலால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே தாய்நாடு திரும்புவது பற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தங்களை விரைவாக இந்தியாவிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில் கட்டுப்பாட்டு மையமானது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. அதில் 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |