Categories
மாநில செய்திகள்

சைபர் தாக்குதல் நடத்தினால் தொடர்பு கொள்ள முடியாது…. தமிழக மாணவர்கள் உச்சக்கட்ட பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் உக்ரைன் தலைநகரான கீவ்  பகுதியில் கடுமையான தாக்குதலை ரஷ்யா  நடத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த தமிழக மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் விமான கட்டணம் கொடுத்து மாணவர் விஷ்வா என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்துள்ளார்.

இவர் இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் ஆவார். இவர் மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது முதலாமாண்டு படிக்கும் மதுரை சேர்ந்த ஆஸ்பிரின், வேலூரைச் சேர்ந்த அக்ஷயா, தஞ்சாவூரைச் சேர்ந்த அருள், வேலூரை சேர்ந்த அஸ்வத் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த நிதின் ஆல்வின் கிஷோர் ஆகியோர் கூறும்போது “நாங்கள் இருக்கும் கீவ் நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வியாழக்கிழமை கடைகளுக்கு சென்று இரண்டு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். அந்த பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இந்திய மாணவர்களும் எங்கள் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஏராளமான போர்  விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன. மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை அடுத்து  ரஷ்யா சைபர் தாக்குதலை நடத்த உள்ளதாக தெரிகிறது. மேலும் சைபர் தாக்குதல் நடத்தினால் அனைத்து தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடும். அப்போது எங்களிடம் உறவினர்கள் தொடர்புகொண்டு பேச முடியாத நிலை ஏற்படும். தற்போது நாங்கள் மிகவும் பத்திரமாக உள்ளோம். இந்தியா வர நாங்கள் விமான டிக்கெட் போட்டு இருந்தோம். ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் தற்போது என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை” என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |