உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பல்வேறு பொருள் நஷ்டமும் உயிரிழப்புகளும் உக்ரைனில் அரங்கேறியுள்ளன. அதேநேரத்தில் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி வழங்கி வருகின்றனர் . அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த எட்டாவது ஜெனரலும், 34வது கர்னலுமான விளாடிமிர் ஃப்ரோலோவ் உக்ரைனில் கொல்லப்பட்டார் என ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து விளாடிமிர் ஃப்ரோலோவ் உடல் St Petersburg
கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது விளாடிமிர் ஃப்ரோலோவ் எந்த இடத்தில் கொல்லப்பட்டார் மற்றும் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த முழு விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் அவர் ஒரு துணிச்சலான மனிதர் இறுதிவரை தன்னுடைய ராணுவ கடமையை அயராது பாடுபட்டு நிறைவேற்றினார் என St Petersburg கவர்னர் தெரிவித்துள்ளார்.