ரஷ்யாவின் கிழக்கே அமைந்திருக்கின்ற விளாடிவோஸ்டாக் எனும் துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கு பின்னணி என்னவென்றால் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாப்பது நோக்கமே ஆகும். இதற்காக 8 வருட போருக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் இல்லை நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே முயற்சி செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் மாஸ்கோ ஆதரவு கொண்ட தனிப்பகுதிகளை பாதுகாப்பதற்காகவே படைகள் அனுப்பப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவுடன் கிருமியாவை இணைத்ததன் தொடர்ச்சியாக 2014 ஆம் வருடம் இருந்தே உக்ரைன் படைகளுடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எங்களது அனைத்து நடவடிக்கைகளும் தொண்பாஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதாகும் அதனை இறுதிவரை போராடி நாங்கள் நிறைவேற்றும் என பேசி உள்ளார். இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நிதி சார்ந்த மற்றும் தொழில்நுட்ப தாக்குதல் போன்றவற்றை ரஷ்யா தடுத்திருக்கிறது. இந்த நாடுகளின் தடைகளை எல்லாம் எதிர்கொண்டு ரஷ்யாவின் இறையாண்மை வலுப்படுத்தப்பட்டு இருக்கிறது நாங்கள் எதனையும் இழக்கவில்லை இழக்கப்போவதுமில்லை ரஷ்யாவில் பொருளாதாரம் மற்றும் நிதி சூழல் ஸ்திரபடுத்தப்பட்டு நுகர்வோர் விலை பணவீக்கம் குறைந்து இருக்கிறது. வேலைவாய்ப்பின்மையும் மிக குறைவாக இருக்கிறது. மேலும் தேவையற்ற தீங்கு தரும் எண்ணங்களை முன்னேற தடுக்கும் ஒவ்வொன்றையும் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிக்கான வலிமையை நாங்கள் அடைவோம் ஏனென்றால் இறையாண்மையின் அடிப்படையில் வளர்ச்சியானது அமையும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வது முட்டாள்தனமான செயல் என கூறிய புதின் ஆசியாவில் எங்களுக்கு போதிய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.