மரிய போல் நகரில் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான் தாக்குதளுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சூழலில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ் டோவ் பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதனை “கலீஜ் டைம்ஸ்” நாளிதழ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்க்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது என சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றார்கள்.