Categories
உலகசெய்திகள்

“உக்ரைனின் எதிர் தாக்குதல் தொடக்கம்”… படைகளுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக தனது படைகளுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். ஆனால் அவை எந்தெந்த இடங்கள் அல்லது எங்கே என்பதை அவர் துல்லியமாக தெரிவிக்கவில்லை.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவரது ராணுவ தளபதிகள் மற்றும் உளவுத்துறை தலைவர்களிடமிருந்து நல்ல அறிக்கைகள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிபரும் மாளிகை தலைமை அதிகாரி ஒருவர் உரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் உக்ரேனிய கொடியை உயர்த்தும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போதைய போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட கிரிசல் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கொடியேற்றும் படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்ய சார்பில் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லிஸி சாங்ஸ் பகுதியிலும் உக்ரைன் ராணுவ வீரர்கள் முன்னேறி இருக்கின்றனர்.

Categories

Tech |