Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் திட்டம்” என்னென்ன தெரியுமா..? போட்டுடைத்த டி.எஸ் திருமூர்த்தி….!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசிய ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரம் அனைத்து நாடுகளுக்குமிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி உக்ரேன் விவகாரத்தை உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்தியா உடனடியாக உக்ரைன் விவகாரம் தொடர்பில் பதற்றத்தை சாந்தப்படுத்த கூடிய முக்கிய தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை தாங்கள் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அனைவரும் “மின்ஸ்க் தொகுப்பை” முழுமையாக செயல்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |