ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என கேள்வி எழுந்திருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணரான yevgeny selivanov மருத்துவர் புடின் வீட்டிற்கு குறைந்தபட்சம் 35 தடவை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் தைராய்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆவார். ரஷ்ய ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த ஊடகம் தற்போது ரஷ்யாவில் தடை செய்யப்பட்டு விட்டதால் வெளிநாட்டிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆகவே புடினுக்கு ஸ்டீராய்டுகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரலாம். அதனால்தான் அவரது கழுத்துப் பகுதியும் முகமும் வீங்கி காணப்படுகிறது எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. மற்றொரு பக்கம் பொது வெளிப்படையாக தைராய்டு புற்றுநோய் குறித்து புடின் ஆர்வம் காட்டியதாக மற்றொரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய தைராய்டு சிகிச்சை மைய தலைவரான ivan Dedov என்பவரை சந்தித்து தைராய்டு புற்றுநோய் குறித்து விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த ivan Dedov என் கீழ்தான் புதனுடைய மூத்த மகளான மரியா பணி செய்கிறார். மேலும் இந்த தகவலை வெளியிட்ட ரஷ்யா ஊடகம் ஒன்று தான் ஏற்கனவே உக்ரைன் மீது போர் தொடுக்க காரணம் அவரது உடல் நலப் பிரச்சினைகள் தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.