உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் மீண்டும் ரூ 26 ஆயிரம் கோடி இராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு அமெரிக்கா பண உதவி வழங்கி வருகிறது.
ஏற்கனவே 4,500 கோடி ரூபாய் மற்றும் 18 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது. நியாயப்படுத்த முடியாத போருக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் இந்த ராணுவ உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.