உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் விமானங்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் கட்டிடங்களும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.