Categories
மாநில செய்திகள்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்… உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…!!!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஈஷா அறகட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது கடந்த 2006 -ஆம் வருடம் முதல் 2014 -ஆம் வருடம் வரைவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2021 நவம்பர் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் கடந்த 2014-ஆம் வருடம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என ஈஷா தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில் ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஈஷா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஈஷா அறக்கட்டளையை கல்வி நிறுவனமாகவே கருத முடியும். மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 சதுர மீட்டர் பரப்பளவில் கல்வி நிறுவனம் இருப்பதால் விலக்கு பெற முடியும் என கூறி நோட்டீசை ரத்து செய்துள்ளது.

Categories

Tech |