ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றின் கரையூரில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஓசூரில் நேற்று இரவு திடீரென்று இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியது. வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.