Categories
உலக செய்திகள்

புனித யாத்திரையில் குண்டு வெடிப்பு… ஈராக்கில் பெரும் பரபரப்பு… தீவிரவாதிகளின் அட்டூழியம் …!!

ஈராக்கில் புனித பயணம் மேற்கொண்டிருக்கும் போது, கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் படுகயமடைந்தனர்.

ஈராக் நாட்டிலுள்ள  பாக்தாத் பகுதியின்  வடக்கே அல் அய்மா பாலம் உள்ளது. அதன் வழியே ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென பாலம் அருகே உள்ள  குப்பை தொட்டியில் இருந்த கையெறி குண்டு ஒன்று வெடித்ததில்  8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் நுண்ணறிவுத் துறையானது, புனித யாத்திரை செல்பவர்களை இலக்காகக் கொண்டே  பயங்கரவாதிகள் இத்தாக்குதலை  திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்றும்,புனித பயணம் மேற்கொண்டவர்களின் பயணத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |