ஈரமான ரோஜாவே சீரியலில் புதிதாக இணைந்த நடிகர், நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திரவியம், பவித்ரா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக இரண்டு கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த நடிகர், நடிகையின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.