Categories
மாநில செய்திகள்

“ஈசியா போகலாம்” மீண்டும் ரோப்கார் சேவை….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து ரோப்கார் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடக்கம் முதற்கட்டமாக ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், கம்பிவடம் (ரோப்), பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கொண்டுவரப்பட்ட சாப்ட்டு, கம்பிவடம் (ரோப்) பொருத்தப்பட்டு அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்தனர். நேற்று ரோப்காரில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்தநிலையில் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால் இன்று மாலை முதல் சேவை தொடங்கப்பட்டது.

Categories

Tech |