கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் நேற்று மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்த நிலையில் அதை எளிமையாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இனி விரைவாக பெற முடியும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேவை இல்லாமல் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வதை தடுக்கும் வகையில் இ -பாஸ் என்ற நடைமுறையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் பல சிரமங்கள் இருப்பதாகவும், முறைகேடு நடப்பதாக எழுந்த புகார் எழுந்தன. இதனை தடுப்பதற்கு தமிழக முதல்வர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.