Categories
மாநில செய்திகள்

“இ பாஸால் கிடைத்த நன்மை”… விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!!

இ பாசால் தொற்று பரவுவதை கண்டுபிடிக்க முடிந்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இயங்கி வருகிறது என்றார். மேலும் ரவுடித்தனம் செய்து வருபவர்களை சட்டப்படி தண்டிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நாட்டில் நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்து காவல்துறையினரை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் இருந்த போது சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக தா.கிருட்டிணன் கொலை போன்ற சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் யாரேனும் வரும் போது கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்றும், பரிசோதனை செய்யாதவர்களை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிப்பதில்லை என்றும் முதலமைச்சர் விளக்கம் கொடுத்தார். ஏற்கனவே கொரோனா பரிசோதனை எடுக்காமல் தருமபுரி திமுக எம்பி செந்தில் வந்த போது தருமபுரி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கொடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு இரண்டாம் தலைநகர் வேண்டும் என்று எழுந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்  2ஆம் தலைநகர் வேண்டும் என்பது அமைச்சர்களின் தனிப்பட்ட கோரிக்கை மட்டுமே அது அரசின் கோரிக்கை அல்ல என முதலமைச்சர் பதிலளித்தார். அதன்பின் இ பாஸ் முறை குறித்து  பேசிய முதலமைச்சர், தொற்று பரப்புபவர்கள் யார் என்று அடையாளம் காணவே இந்த இ-பாஸ் முறை என்றும், இ-பாஸ் முறையை அமல்படுத்துவதால்தான் கொரோனா பரவல் தற்போது தடுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |