வருமானவரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண். இந்த கார்டிலுள்ள 10 இலக்க எண்களில் உங்களது வரி குறித்த அனைத்து விதமான முக்கிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பான்கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது வருமான வரித் துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது.
அதாவது இதை அட்டை ஆக கையில் வைத்துக் கொள்ளாமல், இ-பான்கார்டு பிடிஎப்-ஐ டவுன்லோடு செய்து உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு உங்களது மொபைலில் சேமித்து வைத்துக்கொள்வதன் வாயிலாக நீங்கள் போகும் இடங்களுக்கு அந்த கார்டை கையில் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. மொபைல் போனில் சேமித்துவைத்திருக்கும் இ-பான்கார்டை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது இ-பான்கார்டை எவ்வாறு டவுன்லோடு செய்யலாம் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
# அதிகாரப்பூர்வமான NSDL E-PAN கார்டு டவுன்லோடு செய்வதற்கு https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இணையதளபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
#இ-பான்கார்டை டவுன்லோடு செய்வதற்கு 2 வழிகளானது இருக்கிறது. அதாவது பான்கார்டைப் பயன்படுத்துவது மற்றும் அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணைப் பயன்படுத்துவதாகும்.
# அவற்றில் நீங்கள் எந்த விருப்பத்தை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பான்கார்டை பயன்படுத்தி இ-பான்கார்டை டவுன்லோடு செய்யும் வழிகள் என்னென்ன?
# பான் கார்டின் 10 இலக்க எண்களை பயன்படுத்தி பின், உங்களது பெயர், பிறந்ததேதி, கேட்ச்கோட் மற்றும் ஆதார்எண் ஆகியவற்றை உள்ளிடவேண்டும்.
# அடுத்து தேவையான தகவலை அளித்த பிறகு, அதிலுள்ள வழிமுறைகளை சரிபார்க்க வேண்டும்.
# கேப்ட்சாவை நிரப்பி சமர்ப்பி என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தற்போது இ-பான் கார்டின் பிடிஎப் திரையில் தெரியும்.
# இ-பான்கார்டை டவுன்லோடு செய்ய டவுன்லோட் பிடிஎப் என்பதனைக் கிளிக்செய்ய வேண்டும்.
அக்னாலெட்ஜ் மென்ட் எண்ணைப் பயன்படுத்தி இ-பான் கார்டை டவுன்லோடு செய்யும் வழிகள் என்னென்ன?
# அக்னாலெட்ஜ் மென்ட் எண்ணை பயன்படுத்த வேண்டும்.
# உங்களது பெயர், பிறந்ததேதி, கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
# சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
# தற்போது இ-பான் கார்டின் பிடிஎப் திரையில் தெரியும்.
# இ-பான்கார்டை டவுன்லோடு செய்ய “டவுன்லோட் பிடிஎப்” என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.